ஆயிரம் பொற்காசுகள்
விதார்த், சரவணன் நாயகர்களாகவும், ஜானவிகா நாயகியாகவும் நடிக்கும் படம் இது. உடன் ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பாரதி கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: ஜோஹன். இயக்கம்: ரவி முருகையா. இயக்குநரும் தயாரிப்பாளருமான கேயார் இதைத் தயாரிக்கிறார். "தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் படம் இது. கழிப்பறைக்காகத் தோண்டச் சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்குப் புதையல் கிடைக்கிறது. செய்தி ஊர் முழுக்கப் பரவி ஊரே பங்கு கேட்கிறது. பிறகு என்ன ஆகிறது என்பதே கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பின்னணியாகக் கொண்டது இப்படம்" என்கிறார் படத்தைப்பற்றி இயக்குநர். ஆயிரம் பொன்னாச்சே!

அரவிந்த்

© TamilOnline.com