CIF-BTS வழங்கும் 'சாரல்' இன்னிசை நிகழ்ச்சி
செப்டம்பர் 12, 2020 மாலை 7 மணிக்கு (PST) பாரதி தமிழ்ச் சங்கம் மற்றும் Cancer Institute Foundation இணைந்து, புற்றுநோய் மையத்தின் பணிகளுக்கு நிதிதிரட்டும் 'சாரல்' நிகழ்ச்சியை விரிகுடாப் பகுதியின் VDAZE இன்னிசைக் குழுவுடன் வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியை நேரலையாகத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் காணலாம். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயக்குநர், பாடலாரிசிரியர், இசையமைப்பாளர் திரு. கங்கை அமரன் அவர்கள் கலந்துகொண்டு தமது இசையனுபவத்தை சுவாரஸ்மான பல தகவல்களோடு பகிர்ந்துகொள்வார். திரு. கங்கை அமரனின் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடல்களை இசைக்குழுவினர் வழங்குவார்கள்.

புற்றுநோய் கண்டறிந்து தடுக்கும் நற்பணிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையை அளிக்க வேண்டுகிறோம். நன்கொடை அளிக்க

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com