நடிகை ஆண்ட்ரியா நாயகியாக நடித்திருக்கும் படம். கதாநாயகியை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் வனவிலங்குப் புகைப்படக்காரராக நடித்துள்ளார் ஆண்ட்ரியா. காட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படத்தின் கதை. நீண்ட இடைவெளிக்குப் பின் சலீம் கௌஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசை: அம்ரிஷ். இயக்கம்: நாஞ்சில். "முழுக்கக் காட்டை மையமாக வைத்துப் படத்தை எடுத்திருக்கிறோம். ரிஸ்க் எடுத்து நிறையக் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம். வனப்பகுதிக்குள் யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு அனுமதி பெற்றுச் சென்று 30 நாட்கள் படப்பிடிப்பை நடித்தினோம். திரையில் பார்க்கப் பிரமிப்பாக இருக்கும்" என்கிறார் இயக்குநர்.
அரவிந்த் |