ஸ்ரீகாந்த் நடிப்பில் 'பம்பரக்கண்ணாலே'
பழம்பெரும் நடிகர் சந்திரபாபு பாடிய 'பம்பரக்கண்ணாலே' பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்றை அண்ணாமலை பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறது.

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆர்த்தி அகர்வால் மற்றும் நமிதா. வழக்கம் போல் முக்கோணக் காதல் கதை என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்திராஜா கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com