டாக்சி டிரைவர்களின் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு சுவையான சம்பவங்களைச் சித்தரிக்கிறது 'டாக்சி டிரைவர்'.
டாக்சி டிரைவராக பிரசாந்த் நடிக்க அவருக்கு இணையாக ரீமாசென் மற்றும் நமிதா நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீவித்யா, ராஜேஷ், சத்யபிரியா, தாமு, வையாபுரி என்று பலர் நடிக்கவிருக்கின்றனர். ஒளிப்பதிவை ரவியாதவ் கவனிக்க, ஏ.ஆர். ரகுமானின் சகோதரி மகன் ஜீ.வி. பிரசாத் இசையமைக்கிறார். தமிழ்த் திரை உலகின் மிக இளமையான இசையமைப்பாளர் இவரே. ஆம், இவருக்கு வயது 17.
கவுதம் இயக்கத்தில் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |