புத்தாண்டுக்கு வெளிவந்த படங்களில் 'சந்திரமுகி' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்களும், சிவாஜி குடும்பத்தினரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் ரஜினிகாந்த் சத்தமில்லாமல் தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் அடுத்த படத்தை எடிட்டர் மோகன் தயாரிக்கவிருக்கிறாராம். 'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' ஆகிய படங்களை இயக்கிய ராஜா இப்படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.
பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற தேர்வுகள் வேகமாக நடைபெற்று, விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று ரஜினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொகுப்பு: கேடிஸ்ரீ |