மீண்டும் பாண்டியராஜன்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாண்டியராஜன் நடிப்பில் வரப்போகிறது 'ராசா... ராசா' என்ற நகைச்சுவைப் படம். இப் படத்தை ராக்·போர்ட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பாண்டியராஜனுக்கு ஜோடியாகப் புதுமுகம் ஒருவர் நடிப்பார். தேர்வு நடந்து வருகிறது.

வடிவேலு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். தவிர, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா என்று நகைச்சுவை நடிகர்கள் பலர் நடிக்க இருக்கின்றனர்.

ஒளிப்பதிவை நித்யா கவனிக்க, படத் தொகுப்பை ஏ.பி. மணிவண்ணன் கவனிக்கிறார். இசையமைக்கும் விஷ்வாமாலிக் புதுவரவு. கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக்கிறார் திருமணி.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com