SKCC ஆன்லைன் பணிப்பட்டறை
தொன்மைப் பழக்கங்களில் அறிவியல்
2020 ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 20ம் தேதிவரை Science behind Ancient Practices என்ற தலைப்பிலான ஆன்லைன் பணிப்பட்டறை ஒன்றைக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக ஸ்ரீ காமாக்ஷி கம்யூனிடி சென்டர் (SKCC, சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா) வழங்குகிறது. காஞ்சி காமகோடி மஹாபெரியவர் போதனைகளின் அடிப்படையில் இந்த பட்டறை அமைந்துள்ளது.

இந்த இலவச ஆன்லைன் நிகழ்ச்சிக்கு உங்கள் மொபைல் குறுஞ்செயலி (SKCC App) வழியே பதிவு செய்து பங்கேற்க முடியும். Zoom வழியே ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிமுதல் 7:30 மணிவரை இதில் பங்கேற்கலாம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com