தமிழ் நாடு அறக்கட்டளை
இணையத்தில் ஒரு இன்னிசை மழை
ஆகஸ்டு 23, 2020 அன்று காலை (EST) 11:30 - 1:30, இரவு (IST) 9:00 - 11.00 மணிவரையில் தமிழ் நாடு அறக்கட்டளை 'இணையத்தில் ஒரு இன்னிசை மழை' என்ற நிகழ்ச்சியை வழங்குகிறது. கலைமாமணி மனோ, பாடகி சுர்முகி ஆகியோர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு கலர்ஸ் தமிழ் டி.வி. புகழ் மதன் குழுவினர் பின்னணியிசை வழங்குவார்கள்.

தமிழ் நாட்டின் ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவ நிதி திரட்டும் 'மண் வாசனை' திட்டத்தின்கீழ் உங்கள் மாவட்டக் குழந்தைகளுக்கு உதவும் அரிய வாய்ப்பை இந்நிகழ்ச்சி மூலம் அறக்கட்டளை உங்களுக்கு வழங்குகிறது. நிகழ்ச்சியின் ஒரு பாடலை நீங்கள் தெரிவுசெய்து ஆதரித்து $500 வழங்கி அதன்மூலம் 5 குழந்தைகளின் கல்விக்கு உதவலாம். ஒரு குழந்தைக்கு $100 என்ற விகிதத்திலும் வழங்கலாம்.

TNF USA



முழு விவரங்களுக்கு
அண்ணாதுரை முருகேசன், மிச்சிகன்: 313-461-7935
உஷா சந்திரா, கலிஃபோர்னியா: 412-519-4064

வலைமனை: tnfusa.org
நன்கொடை வழங்க: tnfusa.org/donate

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com