நியூ ஜெர்சியின் திருமதி தேவி நாகப்பன் சில வாரங்களாகக் கவிஞர் கண்ணதாசனின் பல்வேறு பரிமாணங்களை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் Golden Elephant Events சார்பில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்ணதாசனின் கண்ணன், கண்ணதாசனின் கவிநயம், கண்ணதாசன் பாடல்களில் காதல் என்று பலதரப்பட்ட தலைப்புகளில் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த வார நிகழ்ச்சிகளையும், இனி வரும் நிகழ்ச்சிகளையும் youtube.devinagappan.com என்ற வலைத்தளத்தில் கண்டு களிக்கலாம்.
2020 ஜூலை 26 அன்று நடந்த 'கவியரசு கண்ணதாசன் பாடல்களில் தலைமைப் பண்புகள்' நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக கவிஞர் காவிரிமைந்தன் (நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர், கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை 600075) பங்கேற்றார். இதில் திருமதி கோமதி பெரியதிருவடி (டாலஸ்), திரு அகத்தியன் ஜான் பெனடிக்ட் (வாஷிங்டன் DC), திருமதி ஸ்ரீமதி ராகவன் (கனெக்டிகட்), திருமதி கல்பனா மெய்யப்பன் (மேரிலாண்ட்), திருமதி உஷா கிருஷ்ணகுமார் (நியூ ஜெர்சி) ஆகியோர் கலந்துரையாடினர். மேலும் திரு ரமணி ராகவன் (நியு ஜெர்சி), திருமிகு பெரிய திருவடி, செல்வி. ரேஷ்மா (சென்னை), செல்வி சுர்முகி (சென்னை) ஆகிய இசைக்கலைஞர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குத் திரு கிஷோர் தொழில்நுட்ப உதவி செய்தார்.
வரும் நிகழ்ச்சிகளைக் காண: youtube.devinagappan.com
பாலாஜி ஸ்ரீநிவாசன், வாஷிங்டன் DC |