அதோ அந்த பறவை போல
அமலா பால் நாயகியாக நடித்திருக்கும் படம். முக்கிய வேடங்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அமலாபால் ஓர் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளியே வரமுடியாமல் தவிக்கிறார். அவர் எப்படி மிருகங்கள் மற்றும் காட்டுவாசிகளிடமிருந்து தப்பித்து மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இயக்கம் கே.ஆர். வினோத்.

அரவிந்த்

© TamilOnline.com