சொல்லாத கதை...
தினமொரு புதுக்கதை
சொல்லக் கேட்கும்
செல்லப்பிள்ளைக்காக
புவியில் பிறக்காத
விலங்குகளையும்
ராஜா ராணிகளையும்
உருவாக்கிக் கதைசொல்லும்
சாகசக்காரி அம்மா
தன் கதையை மட்டும்
ஒருநாளும் மறந்தும்
சொல்லிவிடுவதில்லை!

அருணா சுப்ரமணியன்,
பெங்களூரு

© TamilOnline.com