கணிதப் புதிர்கள்
1. 3/2, 5/4, -----, 17/16, 33/32. வரிசையில் விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் எது, ஏன்?

2. தந்தையின் வயதுடன் மகனின் வயதைக் கூட்டினால் 66 வருகிறது. மகனின் வயது, தந்தையின் வயதின் இடவல மாற்றமுள்ள எண். தந்தைக்கு மிக வயதான பிறகு பிறந்த அந்த மகன், தற்போது பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவர்களின் வயதுகள் என்ன?

3. மூன்று பூனைகள் மூன்று எலிகளை மூன்று நிமிடங்களில் பிடிக்கும். அப்படியானால் நூறு எலிகளை, நூறு நிமிடங்களில் பிடிக்க எத்தனை பூனைகள் தேவைப்படும்?

4. ஒன்பது எட்டுக்களைப் பயன்படுத்தி, கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ இறுதி விடை ஒன்பதாயிரம் வரச்செய்ய வேண்டும். இயலுமா?

5. காயத்ரியின் வயது கடந்த வருடம் சதுர எண்ணாக இருந்தது. அடுத்த வருடம் அவள் வயது கன எண்ணாக இருக்கும் என்றால், தற்போது அவள் வயது என்ன, ஒரே சமயத்தில் சதுர எண்ணாகவும், கன எண்ணாகவும் அமைய அவளுக்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com