கணித மேதை சேஷாத்ரி
காஞ்சிபுரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்ரி என்னும் சி.எஸ். சேஷாத்ரி (88) காலமானார். பிப்ரவரி 29, 1932ல் பிறந்த சேஷாத்ரிக்குச் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் மிகுந்த ஆர்வம். சென்னைப் பல்கலையில் கணிதவியலில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். அதிலேயே ஆய்வுகளைத் தொடர்ந்து, பம்பாய் பல்கலையில் Ph.D. பெற்றார். இவரது மேதைமை, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஃபண்டமென்டல் ரிசர்ச்சில் பேராசிரியர் பணி வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. 31 ஆண்டுகள் அங்கு பணியாற்றியவர், IMS-ஸிலும் (The Institute of Mathematical Sciences) பணியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ், க்யோட்டோ, பாரீஸ் என பல நாடுகளின் பல்கலைகளில் வருகைதரு பேராசிரியராகவும், பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

அமெரிக்கக் கணிதவியல் நிறுவனம் வழங்கிய சிறப்பு விருது, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, இந்திய அறிவியல் நிறுவனம் வழங்கிய ஸ்ரீநிவாச ராமாநுஜன் விருது, பனாரஸ் பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம், இந்திய அரசு வழங்கிய பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். கணிதவியலில் பல நூல்களை எழுதியிருக்கிறார். சென்னை கணிதவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Chennai Mathematical Institute) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். அங்கு புதிய பல கணிதச் சமன்பாடுகளை நிறுவியிருக்கிறார். 'சேஷாத்ரி மாறிலி' (Seshadri Constant) என்பதாகும் அது.



© TamilOnline.com