இந்த உலகளாவிய நோய்ப்பரவல் (Pandemic) காலத்தில் என்ன செய்தாலும் மனம் அலைபாய்கிறது. எப்போதும் டென்ஷன். தினமும் ஏதேனும் ஒரு கெட்ட செய்தி. என்ன செய்வதென்றே புரியவில்லை மனம் நிலைப்பட என்ன செய்யலாம்!
இப்படிக்கு,
...........
அன்புள்ள சிநேகிதியே
என்னுடைய பதில் சாதாரணமானது. ஆனால், சக்தி வாய்ந்தது. நான் என்ன செய்கிறேனோ அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எழுந்தவுடன், அன்றைய தினம் முழுவதும்...
* இன்று என் வாழ்க்கையில் இது ஒரு புதிய நாள்.
* சூரியன் என் ஜன்னல் வழியாக அழகாக ஒளி வீசுகிறான்.
* நான் இப்போது நலமாக இருக்கிறேன்.
* இன்றைக்கு என்னுடைய உணவைப் பற்றிய கவலை இல்லை.
* இன்றைக்கு எனக்கு இருக்க இடம் இருக்கிறது.
* இன்றைக்கு என் குடும்பம், நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடிகிறது.
* இன்றைக்கு என்னால் வேலை செய்யமுடிகிறது.
* இன்றைக்கு என்னால் இன்னிசை கேட்கமுடிகிறது.
* இன்றைக்கு என்னால் யூட்யூபில் எதையும் பார்த்து ரசிக்க முடிகிறது.
* இன்றைக்கு எனக்கு ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது.
* இன்றைக்கு எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.
* இன்றைக்கு எனக்கு இருக்கும் கவலைகளில் பாதி கற்பனையே!
* இந்த தினத்தின் 24 மணி நேரமும் என்னுடையது. நான் எப்படி வேண்டுமானாலும் பார்த்து என்னுடைய கடமையைச் செய்யலாம்.
* இன்றைக்கு என்னால் உடலாலோ, உள்ளத்தாலோ, பணத்தாலோ பிறருக்கு ஏதேனும் உதவி செய்யமுடிகிறது.
* இன்றைக்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.
* இன்றைக்கு என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.
* இன்றைக்கு எனக்குள் அன்பு பெருகுகிறது.
* இன்றைக்கு நான் எதைச் செய்தாலும் ஆர்வத்துடன் செய்கிறேன்.
* இன்றைக்கு எனக்கு வழிகாட்டியாக, வழியில் வந்தவர்கள், உதவி செய்தவர்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
* My Life is filled with Gratitude and Joy.
என்று திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு கவலையோ, டென்ஷனோ, துக்கமோ வருவதில்லை.