புராணங்களையும், நடப்பு நிகழ்வுகளையும் பாவை வடிவங்கள் வழியே மக்களுக்குக் கொண்டு செல்வன தோல்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து ஆகியவை ஆகும்.
ஜூலை 26, 2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணிக்கு (PST) கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் முதன்முறையாகத் தமிழர்களின் தொல்கலைகளில் ஒன்றாகிய 'மரப்பாவைக் கூத்து' நிகழ்ச்சியை இணையம்வழியே பாரதி தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்குகிறது.
'பாஞ்சாலக் குறவஞ்சி' என்ற தலைப்பிலான மரப்பாவைக் கூத்தினை, களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தைச் சார்ந்த பாவைக்கூத்து கலைஞர்கள் சேலத்திலிருந்து வழங்குவார்கள். இக்கலையைப் பற்றி அறியவும், இதன் அழகை ரசிக்கவும் இதுவோர் நல்ல வாய்ப்பு. மரப்பாவைகள் கலைஞர்களின் கையசைப்பில் உயிர்பெற்றுக் கண்முன்னே இயங்கி, நமக்குக் கதை சொல்வதைக் கண்டு களிக்க பாரதி தமிழ்ச்சங்கம் அன்புடன் வரவேற்கிறது.
அனுமதி இலவசம். நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச்சங்கத்தின் முகநூல் பக்கத்தில் Facebook Live ஆகவும் Youtube Channel ஆகியவற்றில் நேரலையாகக் காணலாம்.
பாரதி தமிழ்ச்சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமை, தமிழின் சிறப்பு ஆகியவற்றை உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் உன்னதக் கூறுகளாக மதிக்கிறது. இளைய தமிழ்ச் சமுதாயம் நமது கலாசாரம், ஆன்மீகம், மற்றும் வரலாறு குறித்த அறிவையும், தெளிவையும், கொண்டிருத்தல் அவசியம் எனக் கருதுகிறது.
எத்தனையோ இன்னல்களைக் கடந்து நமது தொல்கலைகளைப் பாதுகாத்து வரும் இக்கலைஞர்கள் மிகுந்த மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். தற்போதைய அசாதாரணச் சூழல் இக்கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. இவர்களுக்குப் பொருளுதவி செய்ய பாரதி தமிழ்ச்சங்கம் நிதி திரட்டவுள்ளது. இக்கலைகளையும், கலைஞர்களையும் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தங்களாலான நன்கொடையை மனமுவந்து அளிக்குமாறு உங்கள் அனைவரையும் பாரதி தமிழ்ச்சங்கம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
நிகழ்ச்சியின் நேரம்: அமெரிக்காவில்: ஜூலை 26, ஞாயிறு மாலை 7:00 மணி (PST) இந்தியாவில்: ஜூலை 27, திங்கள் காலை 7:30 மணி (IST)
மேலும் விவரங்களுக்கு
செய்திக்குறிப்பிலிருந்து |