தேவையான பொருட்கள்: கேரட் - 1 கிண்ணம் பட்டாணி - 1/2 கிண்ணம் சிவப்புக் குடைமிளகாய் (நறுக்கியது) - 1 கிண்ணம் புளிப்பு வெள்ளரி (நறுக்கியது) - 1/2 கிண்ணம் ஹாலப்பினோ பெப்பர் - 2 இஞ்சி (நறுக்கியது) - 1/4 கிண்ணம் வறுத்த வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப்பொடி - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி பெருங்காயப்பொடி - 1/2 தேக்கரண்டி வினிகர் - 2 தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு - 1/2 கிண்ணம்
செய்முறை: காய்கறிகளை நன்கு கழுவி, ஈரமில்லாமல் துடைத்து, பொடியாக நறுக்கவும். எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாகக் கலக்கவும். 2 மணி நேரம் ஊறிய பிறகு, கண்ணாடி பாட்டிலில் போட்டு உடனேயே உபயோகிக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்து 15 நாள்வரை உபயோகிக்கலாம். எலுமிச்சைத் துண்டுகளைச் சேர்க்கலாம். சால்சா போல் இருக்கும்.
வசுமதி கிருஷ்ணசாமி, டெட்ராயிட், மிச்சிகன் |