மிருகா
மாறுபட்ட தோற்றத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக இதில் நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடித்துள்ளார். உடன் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் எம்.வி. பன்னீர்செல்வம். இசை: அருள் தேவ். இயக்கம்: ஜெ. பார்த்திபன். படத்தில் புலி ஒன்றும் நடித்திருக்கிறது. ஆனால், 'மிருகா' என்பது இந்தப் புலியல்ல என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com