சங்கர நேத்ராலயாவுக்கு உலக அளவில் சிறப்பு
சர்வதேச அளவில் பிரபலமான 'நியூஸ்வீக்' இதழ், சென்னை சங்கர நேத்ராலயாவை உலகின் சிறந்த 100 மருத்துவ அமைப்புகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. 42 வருடங்களாகக் கண் மருத்துவம், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமூகக் கண் மருத்துவ சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கும் சங்கர நேத்ராலயா, உலகின் மிகச்சிறந்த 4 கண் மருத்துவ மனைகளில் ஒன்றாகவும், இந்தியாவின் முதன்மை நிறுவனமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் தொலைநோக்குக் கொண்ட டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களால் தொடங்கப்பட்டதாகும். லாப நோக்கற்ற, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்கும் சங்கர நேத்ராலயா, ஏழை எளியோருக்கு முற்றிலும் இலவசமாகச் சிகிச்சை வழங்குகிறது. ஓர் ஆராய்ச்சி நிறுவனம் என்ற முறையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நூற்றுக்கு 75 கட்டுரைகள் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர நேத்ராலயாவின் ஆராய்ச்சிக்கூடத்தில் பயன்பட்டுவந்த விரைந்து துல்லியமாக நோயறியும் கருவியை, தற்போது 'கோவிட் -19' கொரோனா விரைவுச் சோதனைக்காக, தமிழக அரசின் சென்னை ஆய்வகத்திற்குக் கொடுத்துள்ளது. சங்கர நேத்ராலயாவின் சமூகத் தேவைக்குத் தோள்கொடுக்கும் இந்தப் பாங்கு பாராட்டுக்குரியது.



சென்னை அமைப்பின் இலவச சேவைகளுக்கு அமெரிக்காவிலிருந்து பொருளாதார ரீதியான ஆதரவு தரும் நோக்கத்துடன் Sankara Nethralaya Ophthalmic Mission Trust Inc, USA அமைப்பு, 1988ஆம் வருடம் மேரிலாண்டில் தொடங்கப்பட்டது. இது IRS (501)(c)(3) பதிவுபெற்ற வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகும். தற்போது அமெரிக்காவில் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. 'சாரிட்டி நேவிகேட்டர்' வழங்கும் அமெரிக்க அறக்கட்டளைகளுக்கான மிக உயர்ந்ததான '5 நட்சத்திர' அங்கீகாரத்தை OM அறக்கட்டளை பெற்றுள்ளது.

மேலும் அறியவும் ஆதரிக்கவும்:
திரு எஸ்.வி. ஆச்சார்யா: 301.529.7377
மின்னஞ்சல்: acharya@snomtrust.org

திரு பாலா ரெட்டி இந்தூர்த்தி: 770.851.4765
மின்னஞ்சல்: brindurti@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com