சேனைக்கிழங்கு பஜ்ஜி
தேவையான பொருட்கள்
சேனைக்கிழங்கு (தோல்சீவி விரல் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்) - 1-1/2 கிண்ணம்
கடலைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு - 1/2 கிண்ணம்
மைதாமாவு - 2 தேயிலைக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 2 தேயிலைக்கரண்டி
வெங்காயம் (சிறியது) - 1
இஞ்சி - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை
பச்சைமிளகாய் - 1 அல்லது 2
நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
கடலைமாவு, மைதாமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும். மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் மிக்சியில் விழுதாக அரைத்து அதில் போட்டு, உப்பும், நெய்யும் விட்டுப் பிசைந்து தோசை மாவுப் பதத்திற்கு கரைக்கவும். நறுக்கிய சேனைத் துண்டுகளை மாவில் ஒன்று ஒன்றாகத் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இந்த பஜ்ஜி மிகவும் நன்றாகக் குச்சி போன்று மொறுமொறுப்பாய் இருக்கும். கெச்சப் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். 'ஃப்ரென்ச் ஃப்ரைஸ்' போன்று இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com