ஜிகிரி தோஸ்து
நடிகரும் குறும்பட இயக்குநருமான விக்னேஷ்குமார் நாயகனாக நடிக்கும் படம் இது. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இவர், தனது குறும்படங்களுக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றவர். நாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். உடன் பிக்பாஸ் ஷாரிக், ஆர்.என்.ஆர். மனோகர், துரை சுதாகர், வீ.ஜே. ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை அஷ்வின் விநாயகமூர்த்தி. நட்பின் பெருமை சொல்லவரும் இப்படத்தின் கதையை எழுதி, தயாரித்து, நடித்து இயக்குகிறார் விக்னேஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com