ட்ரிப்
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் அறிவியல் கலந்த நகைச்சுவைப் திரைப்படம் இது. பிரவீன் நாயகன். நாயகியாக சுனைனா நடிக்கிறார். சித்துகுமார் இசையமைக்க, சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். படம்பற்றி இவர், "ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களைக் காமெடி கலந்து சொல்கிறோம். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக வெளியூர் போகின்றனர். வழியில் அவர்களுக்கும், உடன் செல்லும் சில டூரிஸ்ட்களுக்கும் ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் படம். சயின்ஸ் ஃபிக்‌ஷன் + டார்க் காமெடி கலந்து, இப்படம் சுவையாக இருக்கும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com