தண்டகன்
அபிஷேக் நாயகனாகவும், மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா நாயகியராகவும் நடிக்கும் படம் இது. முக்கிய வேடத்தில் 'ராட்சசன்' பட வில்லன் சரவணன் நடிக்கிறார். உடன் கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தண்டகன் என்பது ஒரு ராமாயணக் கதாபாத்திரம். அதனை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்கிறார் கோலிவுட்டார். இசை ஷ்யாம் மோகன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கே. மகேந்திரன்.

அரவிந்த்

© TamilOnline.com