வேட்டை நாய்
ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் அதிரடிப் படம் இது. சுபிக்‌ஷா கதாநாயகி. உடன் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஸ்ரீகாந்த் தேவா. எழுதி இயக்குகிறார், எஸ். ஜெய்சங்கர். "படத்தின் நாயகன் முரடன், மூர்க்கன். ஆனால், அடிப்படையில் மிக நல்லவன். உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் ஒருத்தி அவனை யார் என்று உணரவைக்கிறாள். இப்படிப்பட்ட இருதுருவ குணச்சித்திரங்கள் எப்படி இணையமுடியும். அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன என்பதைப் படம் சொல்கிறது" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com