பிஸ்கோத்
சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் இது. கதாநாயகியாகத் தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஸ்வாதி முப்பலா அறிமுகமாகிறார். இவர் மிஸ் கர்நாடகா பட்டம் வென்றவர். முக்கிய வேடங்களில் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாகப் பணியில் சேர்ந்தவன் எப்படி உயர்பதவிக்குச் செல்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ரதன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார் ஆர். கண்ணன். "படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள். இதற்காக அவர் சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார். இது சௌகார் ஜானகியின் 400வது படமும்கூட" என்று காதைக் கடிக்கிறார் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com