கணிதப் புதிர்கள்
1. இரண்டு வெவ்வேறு எண்கள். அவற்றைக் கூட்டினாலும், இரண்டையும் பெருக்கினாலும் ஒரே விடை வரவேண்டும். அந்த எண்கள் எவை?

2. சீதாவின் வயது எட்டின் மடங்குகளில் உள்ளது. அடுத்த வருடம் அது ஏழின் மடங்குகளில் ஒன்றாக ஆகும் என்றால், சீதாவின் தற்போதைய வயது என்ன?

3. ஒரு பரிசுப்பெட்டியில் சில சாக்லேட்டுகள் இருந்தன. ராமு, தனக்கும் தன் தம்பிகள் இருவருக்குமாக அப்பா அதனை வாங்கி வைத்திருக்கிறார் என்று நினைத்தான். எனவே அதனை மூன்று பங்காக்கி தன் பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றான். இதனை அறியாத தம்பி சோமுவும் அவ்வாறே நினைத்து மூன்று பங்காக்கி, தன் பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு போனான். அடுத்த வந்த குட்டித் தம்பி சுந்தரும் இவ்வாறே நினைத்து மூன்று பங்காக்கி, தன் பங்கை மட்டும் எடுத்துச் சென்றான். அப்பா வந்து பார்த்தபோது பெட்டியில் 8 சாக்லேட்டுகள் மட்டுமே மீதம் இருந்தன. குழந்தைகளை அழைத்து விசாரித்து நடந்ததை அறிந்த அவர், அந்த எட்டுச் சாக்லேட்டுக்களையும் மொத்தமாக மூவருக்கும் சமமான எண்ணிக்கையில் கிடைக்குமாறு பிரித்துக் கொடுத்தார். அப்படியென்றால் ராமு, சோமு, சுந்தர் பெற்ற மொத்த சாக்லேட்டுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4. கீழ்கண்ட விதிமுறைகளைக் கொண்ட எண் அமைப்பை உங்களால் உருவாக்க முடியுமா?
i. நீங்கள் பயன்படுத்தும் எண்கள் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை மட்டுமே இருக்கலாம்.
ii. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
iii. அவை நூறுக்குக் கீழே உள்ள பகா எண்களாக இருக்க வேண்டும்.
iv. அவற்றைக் கூட்டினால் வரும் விடையும் பகா எண்ணாகவே இருக்கவேண்டும்.

5. 11ன் வர்க்கம் = 121; 111ன் வர்க்கம் = 12321; 1111ன் வர்க்கம் = 1234321. இவற்றை முன், பின் என எப்படிப் பார்த்தாலும் ஒரே எண்களே வரும் (palindrome) இதேபோல் அமைந்த இரட்டைப் படை எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com