தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 1 கிண்ணம் மைதா மாவு - 1/4 கிண்ணம் வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 5 சீரகம் - 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா - 1 சிட்டிகை தயிர் - 1 கிண்ணம் இஞ்சி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை: ஜவ்வரிசியைத் தயிரில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதை நன்றாக மசித்து, மைதாவைப் போட்டு, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், பேக்கிங் சோடா, கறிவேப்பிலை, கொத்துமல்லி பொடியாய் நறுக்கிப் போட்டு, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும். மாவை உருட்டி போண்டாவாகப் பொரித்து எடுக்கவும். இது சுவையான மொறுமொறு போண்டா.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |