இனிப்புச் சோறும் போண்டாவும்
கவன் அரிசி (கருப்பு அரிசி) இனிப்புச் சோறு

தேவையான பொருட்கள்:
கவன் அரிசி - 1 கிண்ணம்
நாட்டுச் சர்க்கரை - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்யும் விதம்:
கவன் அல்லது கருப்பு அரிசியைக் கழுவி 3 கிண்ணம் தண்ணீர் சேர்த்து முதல்நாள் இரவே ஊறவைக்கவும். சுமராக 12 மணி நேரம் ஊறவேண்டும். ஊறவைத்த அரிசியை அப்படியே தண்ணீருடன் குக்கரில் வைத்து வேகவைக்கவும்.

ஐந்து விசில் வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் முப்பது நிமிடம் வைக்கவேண்டும். இத்துடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய், ஏலக்காய் சேர்த்துக் கிளறி சூடாகச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காலையில் சாப்பிட ருசியான, ஆரோக்கியமான உணவு.

மரகதம் அம்மா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com