ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்
The Wolf in Sheep's Clothing

Once upon a time a Wolf wanted to secure food more easily.
முன்னொரு காலத்தில் ஓநாய் ஒன்று எளிதாக இரையைப் பிடிக்க விரும்பியது.

Dressed in the skin of a sheep, he pastured with the flock deceiving the shepherd.
அது ஓர் ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு இடையனை ஏமாற்றி மந்தையோடு மேய்ந்தது.

In the evening he was shut up by the shepherd in the fold; the gate was closed securely.
மாலையில் இடையன் ஓநாயையும் சேர்த்துப் பட்டியில் அடைத்துக் கதவைப் பூட்டினான்.

But the shepherd, returning to the fold during the night to obtain meat for the next day, mistakenly caught up the Wolf instead of a sheep. He killed him instantly.
மறுநாள் கறிக்காக இரவில் மீண்டும் பட்டிக்கு வந்த இடையன், தவறிப்போய் ஆட்டுக்குப் பதில் ஓநாயைப் பிடித்தான். உடனே அதைக் கொன்று விட்டான்.

Harm seek. harm find
கெடுவான் கேடு நினைப்பான்

-

© TamilOnline.com