அக்கா குருவி
இரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய படம் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. 1997ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட்ட இப்படம், உலக அளவில் குழந்தைகளாலும் மிகவும் விரும்பப்பட்டது. இப்படத்தின் தமிழ் உரிமையைப் பெற்று அதனைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சாமி. இப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தாரா ஜெகதாம்பா, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இசை இளையராஜா. தெலுங்கு மற்றும் தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது அக்கா குருவி.

அரவிந்த்

© TamilOnline.com