லாஸ்ட் 6 ஹவர்ஸ்
பரத் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கிறது லாஸ்ட் 6 ஹவர்ஸ். உடன் விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான அனூப் காலித்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசை கைலாஷ் மேனன். கதை சுரேஷ். இயக்கம் சுனிஷ்குமார். இவர் ராஜீவ் மேனனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது இப்படம். "நான்கு புத்திசாலிகள் பெரிய திருட்டு ஒன்றை 6 மணி நேரத்தில் செய்து முடிக்கத் திட்டமிடுகின்றனர். அப்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கின்றன. அப்போது நடந்தவைதான் படத்தின் கதை" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com