இயற்கையின் கண்டனக் கடிதம்?
நண்பர் ஒருவர் கேட்டார்
மனிதனின் ஆட்டம்
முடிந்ததா என்று...

ஆட்டம் முடிந்துவிடாது
முடிந்துவிடவும் கூடாது...

சோதனைகள் பல வென்று
சாதனைகளைக் கண்டது
இந்த மானுடம்

தொட்டால்மட்டுமே ஒட்டும்
இந்த நுண்ணுயிரி
அதைச் சாய்த்துவிட முடியுமா?

எல்லாம் இருந்தும்
எதையோ கைபேசியில் தேடிக்கொண்டிருக்கும்
இன்றைய மேதாவி மானுடனுக்கு
கண் 'திறந்து' தேடச்சொல்லி
இயற்கை அனுப்பிய
கண்டனக் கடிதம்!
இந்தக் கொரோனா...

கண் திறப்போம்
மனிதம் வளர்ப்போம்!
இது மட்டுமல்ல
எதுவும் கடந்துபோகும்!

ரவி மஹாலிங்கம்,
நெவார்க், கலிஃபோர்னியா

© TamilOnline.com