1. 10 + 8 - 3 + 12 - 7 - 5 - 15 + ? = 9
கேள்விக்குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
2. ரவியைவிட ராமு இரண்டு வயது பெரியவன். ராதா, ராமுவைவிட நான்கு வயது பெரியவள். ரவி பிறக்கும்போது அவனது தாய் சீதாவின் வயது 28. தற்போது இவர்கள் நால்வரின் சராசரி வயது 41 என்றால் ஒவ்வொருவரின் வயதும் என்ன?
3. A B C (-)
Z C C
-------
B C 0
-------
மேற்கண்ட கணக்கில், A B C Zன் இடத்தில், எந்த ஒற்றை இலக்கத்தைப் பயன்படுத்தினால் இந்தக் கணக்கு பூர்த்தியாகும்?
4. 8542 = 729316; 5672 = 321489
மேற்கண்ட எண்களின் சிறப்பு யாது?
5. நான்கு ஐந்துகளைப் பயன்படுத்தி, பெருக்கியோ, கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ விடையாகப் பத்து வரச் செய்யவேண்டும். இயலுமா?
அரவிந்த்
விடைகள்1. விடுபட்ட இடத்தில் வர வேண்டிய எண் = 9
2. ரவியின் வயது = x
ராமுவின் வயது = x + 2
ராதாவின் வயது = x + 6
சீதாவின் வயது = x + 28
நால்வரின் தற்போதைய சராசரி வயது = 41
நால்வரின் தற்போதைய மொத்த வயது = 41 * 4 = 164
x + x + 2 + x + 6 + x + 28 = 164
4x + 36 = 164
4x = 164-36 = 128
x = 32
ஆக, ரவியின் தற்போதைய வயது = 32; ராமு = 34 (32+2); ராதா = 38(32+6); சீதாவின் வயது = 60 (32+28)
3. A = 6;
3 = 2;
C = 1;
Z = 4
6 2 1 (-)
4 1 1
-----
2 1 0
-----
4. மீண்டும் பாருங்கள். 1 முதல் 9 வரை எல்லா எண்களும் இடம்பெற்றுள்ளன. இதுவே இவற்றின் சிறப்பு.
8542 = 729316;
5672 = 321489
5. இயலும். 5/5 X 5 + 5 = 10