ஜுன் 2005: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. சதிர் தொடங்கும் வேகம் குழைந்த மண் (3)
5. மற்றவர்க்குதவா குணம் கோவிலிருக்கும் ஊரில் மூட்டம் விலகிய புன்னகை (5)
6. சைத்தான் தலைமையுடன் கை கலப்பு என்பது கைப் பேச்சு (2)
7. கோட்டைக்குக் காவல் தர முதலெழுத்து நீக்கு (3)
8. உயர்ந்த மரத்தில் முடிவுறா விக்கல் மருந்தால் உண்டாகும் தொல்லை (5)
11. சிறுத்தை தலை பொருந்திய உடல் அழகில்லை (5)
12. கையால் வணங்கி அழை, முழுதாக இல்லை (3)
14. பசு, கனியில்லா மாசியுடன் பெரியோரின் வாழ்த்து (2)
16. சுமையானாலும் செல்வம் (5)
17. தமிழரசு வடுகரிடம் சென்ற அடையாளம் (3)

நெடுக்காக

1. பண நெருக்கடி தோன்றும் சமயம் தடை சிக்க மா புரட்சி (6)
2. புல் நடுவே பாதி கன நீர் (3)
3. சுயம்வர சமயத்தில் குதிரை மேல் கவர்ந்து செல்லப்பட்ட இளவரசி (5)
4. திராட்சை எல்லைகள் வடக்கோ தெற்கோ (2)
9. ஆச்சரியம் தோன்ற ஓவியப் படையல் (6)
10. அடுப்பங்கரை நிலை குலைந்து குறைய மாட்டிக்கொள் (5)
13. ஒரு மாதம் பாதி மூர்த்தி மத்திய ஆசியாவைக் கைக்கொண்ட அரசன் (3)
15. குழந்தை வள்ளல் சென்றதால் சிபாரிசு (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

மே 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக:5. விண், 6. திருப்பள்ளி, 7. படிக்கா, 8. ஏனைய, 9. தும்பு, 11. தாமதி, 13. குயவன், 16. சூரிய காந்தி, 17. மேதை
நெடுக்காக1. கண்ணாடி, 2. பாதிக்காது, 3. தப்பு, 4. கொள்வினை, 10. புகுத்திய, 12. மயிரிழை, 14. வழி மேல், 15. புகார்

© TamilOnline.com