திடீர் காரக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிண்ணம்
பயத்தம் பருப்பு - தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம்
துவரம்பருப்பு - 1/2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 3/4 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 4
பச்சைமிளகாய் - 1
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
மிளகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தாளிப்பதற்கு
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இவற்றை ஊறவைத்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை ஊறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும். அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக மிளகாய், மிளகு சேர்த்து அரைத்து, தேங்காய்த் துருவல் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, உப்புப் போட்டு நெய், தேங்காய் எண்ணெய் விட்டு, கொதி வரும்போது மற்றொரு வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், பச்சை மிளகாய் தாளித்து அதில் கொட்டவும். மாவைச் சிறிது சிறிதாகப் போட்டு, கட்டியில்லாமல் கிளறி எடுக்கவும். கையில் நெய் தடவிக்கொண்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். மிகவும் சுவையான உப்புக் கொழுக்கட்டை தயார். தேங்காய்த் துருவலைச் சிவக்க வறுத்துப் போட்டுச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com