தியாகராஜ ஆராதனை
ஃபிப்ரவரி 15, 2020 அன்று சனாதன தர்ம கேந்திரமும் சனாதன யக்ஷ ரங்க கலாசார மையமும் இணைந்து தியாகராஜ ஆராதனை விழாவைச் சிறப்புறக் கொண்டாடின. இதற்கு Silicon Valley Local Talent UnderScored (SVLOTUS) அமைப்பினர் தமது ஆதரவை வழங்கிச் சிறப்புச் சேர்த்தனர். விரிகுடாப்பகுதியின் பிரபல இசைக்கலைஞர்கள், குருமார்கள் மற்றும் இசை, நாட்டிய மாணவர்கள் பங்கேற்ற பஞ்சரத்னக் கீர்த்தனை நிகழ்ச்சி இதில் இடம்பெற்றது. நாள்முழுவதும் நூற்றுக்கு மேற்பட்டோர் தனியாகவும் குழுக்களாகவும் வந்திருந்து தியாகராஜ கிருதிகளை அர்ப்பணிப்போடு இசைத்தும் நடனமாடியும் அஞ்சலி செலுத்தினர். அடுத்த ஆண்டு இவ்விழா ஃபிப்ரவரி 21ம் தேதி நடைபெறும்.

கலைநிகழ்ச்சி



செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com