2020 ஃபிப்ரவரி 20-22 நாட்களில் மஹாசிவராத்திரி விழாவை 3 நாள் வைபவமாக மஹாகாலேஸ்வர் மந்திர் கொண்டாடியது. முதல் நாளன்று வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் மற்றும் ருத்ர ஹோமம் நடைபெற்றன. சிவராத்திரி தினமான 21ம் தேதி இரவு நான்கு ஜாமங்களிலும் ருத்ர அபிஷேகம் செய்யப்பட்டதோடு, நள்ளிரவு 12 மணிக்கு பஸ்ம ஆரத்தியும், பில்வ அர்ச்சனையும் நடத்தப்பட்டன. அன்றைய தினம் விரிகுடாப்பகுதியின் இளங்கலைஞர்கள் சங்கீதம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். 22ம் தேதி சிவ-பார்வதி திருக்கல்யாணம் சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகர ஸ்ரீ காளிகாம்பாள் தேவஸ்தான நிறுவனர் சுவாமி சுராச்சாரியா முத்துபட்டர் பூஜைகளை, மஹாகாலேஸ்வர மந்திரின் நிறுவனர் சுவாமி சதாசிவோம் அவர்களின் திருமுன்னர் நடத்திக் கொடுத்தார்.
சுதா கண்ணன், சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா |