'ஸ்கந்தா' நாட்டிய நாடகம்.
மார்ச் 8, 2020 அன்று மாலை 4:00 முதல் 7:00 மணிவரை எவர்கிரீன் வேலி உயர்நிலைப்பள்ளி அரங்கில் (3300 Quimby Road, San Jose, CA) 'ஸ்கந்தா' என்ற நாட்டிய நாடகம் நடைபெறும்.

அறுபடை வீடு ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்து அதா்மம் அழித்து தா்மம் காத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் முருகனைக் குறித்தது இந்த நிகழ்ச்சி. முத்தமிழும் கொண்ட பரதக்கலை மூலம் முருகப் பெருமானின் கதையை 'ஸ்கந்தா' நாட்டிய நாடகம் வழங்கும். 'இன்பம்' அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற உள்ள இந்த பக்தி விருந்தினை அனைவரும் அள்ளிப் பருக வாருங்கள்.

நிகழ்ச்சி 4 மணிக்குத் தொடங்குவதால் அன்புகூர்ந்து 3.30க்கே வந்தால் அமர்வதற்கு எளிதாக இருக்கும்

நுழைவுக்கட்டணம்: $20.00

முன்பதிவுக்கு: PayPal to: ryannathansf@gmail.com under Friends and Families

நிகழ்ச்சியில் திரட்டப்படும் தொகையில் ஒரு பகுதி 'இன்பம்' அறக்கட்டளையின் அன்னதானத் திட்டங்களுக்கு வழங்கப்படும்.

ரயான் நாதன்,
சான் ஃபிரான்சிஸ்கோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com