மார்ச் 2020: வாசகர்கடிதம்
அமரர் பரணீதரன் பற்றி அரவிந்த் எழுதிய கட்டுரை (ஃபிப்ரவரி 2020 இதழ்) சிறப்பாக இருந்தது. 1950-70 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வளர்ந்து இங்கு குடிபெயர்ந்த என் போன்றவர்களுக்கு அந்தக்கால எழுத்தாளர்கள் பற்றி அரவிந்த் எழுதிவரும் கட்டுரைகள் இனிய நினைவுகளை அசைபோட உதவுகின்றன. புத்தகங்களின் அட்டைகளுடன் அவை எங்கு கிடைக்கும் என்பதையும் குறிப்பிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்.

அ. சந்திரசேகரன்,
கூப்பர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com