தீ இவன்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நவரச நாயகன் கார்த்திக் முத்துராமன் நாயகனாக நடிக்கும் படம் 'தீ இவன்'. சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்திகா, அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். 'ரோஜா மலரே', 'அடடா என்ன அழகு' படங்களை இயக்கிய டி.எம். ஜெயமுருகன் இசையமைத்து இப்படத்தை இயக்குகிறார். "அண்ணன்-தங்கை பாசத்தின் பின்னணியில் கொங்குச்சீமை மக்களின் வாழ்வைச் சொல்கிற படம் இது. இதில் அண்ணனாக, கதையின் நாயகனாக கார்த்திக் வருகிறார். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும் பட வரிசையில் இந்தப்படமும் இடம்பெறும்" என்கிறார் ஜெயமுருகன். பாசத்தீயோ!

அரவிந்த்

© TamilOnline.com