ஸ்ருதி ஸ்வர லயா: சென்னைக் கச்சேரிகள்
விரிகுடாப்பகுதியின் பிரபல இசைப்பள்ளியான ஸ்ருதி ஸ்வர லயாவின் மானஸா சுரேஷ் சென்ற பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சென்னை சங்கீத சபாக்களில் கச்சேரிகள் செய்து வருகிறார். 2019 சங்கீத சீஸனில் அவர் சென்னை சேலையூரிலுள்ள ஸ்ரீ சாந்தானந்த கலா கேந்திரா மற்றும் நந்தி ஃபைன் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கிய இசை நிகழ்ச்சியில் இவர் செய்த கச்சேரி முக்கியமானது. தவிர பொழிச்சலூரில் மற்றொரு கச்சேரி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த இசைப்பள்ளியின் மற்றொரு மாணவியான நிலா ராஜேஷ் டிசம்பர் 29, 2019 அன்று VDS ஆர்ட்ஸ் அகாடமியின் மார்கழி இசைத் தொடரில் கச்சேரி செய்தார்.

குரு அனுராதா சுரேஷ் (நிறுவனர், ஸ்ருதி ஸ்வர லயா) ஜனவரி 2, 2020 அன்று ஆர்க்கே கன்வென்ஷன் சென்டரில் கர்நாடக இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com