கலிஃபோர்னியா ராதா கல்யாணம் 2020
2020 ஃபிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 தேதிகளில் கலிஃபோர்னியா ஞானானந்த சேவா சமாஜத்தின் 7ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ராதாகல்யாண வைபவத்தை லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தின் அகெல்லா அரங்கத்தில் நடத்தவுள்ளது. இது சமாஜம் அமெரிக்காவில் தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவுற்றதையும் கொண்டாடும் விழாவாகும்.

வைபவத்தின் தொடக்க நிகழ்ச்சியாக ஃபிப்ரவரி 29ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு ஸ்ரீ ஞானானந்த சுவாமிகள் பாதுகை அபிஷேகம், பூஜை ஆகியவை நடைபெறும். தொடர்ந்து திரு கிரம்பூர் குருநாதன் பாகவதர் கோஷ்டியினரின் சம்பிரதாய பஜனை நடைபெறும். மாலை 4 மணிக்கு திவ்யநாம சங்கீர்த்தனம், தீபப்பிரதிக்ஷணம் நடைபெறும்.

மார்ச் 1ம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீவித்யா ஹோமமும், 9 மணிக்கு ராதா கல்யாண மஹோத்சவமும் நடைபெறும்.

சமாஜத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் சம்பிரதாய பஜனை, நாம சங்கீர்த்தனத்தைக் கிரம்பூர் திரு குருநாத பாகவதர் கோஷ்டியினர் சிறப்புற நடத்தி வருகின்றனர்.

மேலே அறிய, பங்கேற்க, பொருளுதவி ஆதரிக்க, கீழ்க்கண்ட வலைமனையில் பதிக: www.gssus.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com