தமயந்தி
நவரசன் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து இயக்கும் படம் தமயந்தி. நாயகியைப் பிரதானப்படுத்தும் இப்படத்தில் குட்டிராதிகா நாயகியாக நடித்துள்ளார். உடன் லோகி, ராஜ்பகதுார், அஞ்சனா, கார்த்திக், வீணா சுந்தர், சாது கோகிலா, ராஜ்பாலவாடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வசனம் மற்றும் பாடல்களை தர்மபுரி சோமு எழுத, கணேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். "1980ம் ஆண்டு கதாநாயகியையும் அவரது குடும்பத்தையும் வேரோடு அழித்து விடுகின்றனர் சிலர். 2019ம் ஆண்டு அரண்மனையிலிருந்து திடுமென்று கதாநாயகியின் ஆவி கிளம்புகிறது. கொலைகாரர்களைத் தேடிப் போகிறது. நடப்பதை நீங்களே யூகிக்கலாம்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com