பாம்பாட்டம்
'காக்க காக்க', 'திருட்டுப்பயலே', 'நான் அவனில்லை' போன்ற படங்களில் நடித்த ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பின் நாயகனாக நடிக்கும் படம் 'பாம்பாட்டம்'. பயங்கரம் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இதனை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சௌகார்பேட்டை', 'வீரமாதேவி' போன்ற படங்களை இயக்கியவர். யுகபாரதி பாடல்களை எழுத அம்ரீஷ் இசையமைக்கிறார். வசனம்: பா. ராகவன். இயக்குநர், "இதுவரை பார்த்திராத திகில் படமாக பாம்பாட்டம் இருக்கும். ஏராளமான கிராஃபிக்ஸ் காட்சிகள் உண்டு. ஐந்து மொழிகளில், படம் வெளியாக உள்ளது" என்கிறார். பாம்புன்னா படையும் நடுங்குமே! பாம்பாட்டத்துக்கு?

அரவிந்த்

© TamilOnline.com