ரஜினியின் புதிய படம்
சமீபத்திய 'தர்பார்' படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்குகிறார். பெயர் சூட்டப்படாத இப்படம் ரஜினி நடிக்கும் 168வது படமாகும். ரஜினிக்கு இணையராக குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜார்ஜ் மரியான், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். டி. இமான் இசை. கிராமப் பின்னணி கொண்ட குடும்பக் கதை இது என்று சொல்லும் கோலிவுட் கோவிந்து, இவ்வாண்டு ஆயுதபூஜைக்கு இப்படம் வெளியாக இருக்கிறது என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com