பொன்னியின் செல்வன்
கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் இயக்குகிறார். குமரவேலுடன் இணைந்து திரைக்கதையை மணிரத்னம் எழுத, எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனாக - மாமன்னன் ராஜராஜனாக - ஜெயம் ரவி நடிக்கிறார். வந்தியத்தேவனாக நடிக்கிறார் கார்த்தி. நந்தினியாக ஐஸ்வர்யாராய், பெரிய பழுவேட்டரையராக மலையாள நடிகர் லால், ஆதித்த சோழனாக விக்ரம் என அணி வகுத்திருக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஜெயராம், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் பல நடிகர்கள் இணைய இருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். 800 கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்க இருக்கிறார்கள். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது. முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர். தொடங்கி, கமல்வரை பலருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு கனவு. மணிரத்னம் அதனை நிறைவேற்றட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com