கணிதப்புதிர்கள்
1. 6 + 2 = 128; 7 + 3 = 2110; 8 + 4 = 3212 என்றால் 9 + 5 = ?

2. வெளிநாட்டில் இருந்து வந்திருந்த சங்கரின் தாத்தா அவனுக்கு ஒரு ஷூ வாங்கி வந்திருந்தார். சங்கர், அதுபற்றித் தன் நண்பர்களிடம் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதன் நிறத்தைப் பற்றிச் சொன்னான். ராமு உடனே "ஷூவின் நிறம் வெண்மை, சரியா?" என்றான். உடனே சிவா, "ஷூவின் நிறம் நிச்சயம் கறுப்பாக இருக்காது" என்றான். கீதா, "ஏன், ஷூவின் நிறம் வெண்மையாகவும் இருக்கலாம் அல்லது பழுப்பாகவும் இருக்கலாம்" என்றாள். உடனே சங்கர், "நீங்கள் மூவர் சொன்னதில் ஒருவர் சொன்னது தவறு. இருவர் சொன்னது சரி" என்றான். ஷூவின் நிறம் என்ன?

3. 23, 22, 24, 23, 25, 24, ... வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது, ஏன்?

4. போட்டி ஒன்றில் வென்றதற்காக வழங்கப்பட்ட பரிசுப் பெட்டியில் மொத்தம் 1681 டாலர் தொகை இருந்தது. அது, எத்தனை மாணவர்கள் இருந்தார்களோ அத்தனை பேருக்கும் சமமான எண்ணிக்கையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. அப்படியென்றால் மாணவர்கள் எத்தனை, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

5. ஒரு கூடையில் ஆப்பிள்களும், ஆரஞ்சும், மாம்பழங்களும் சேர்த்து மொத்தம் 90 பழங்கள் இருந்தன. ஆரஞ்சுகளைப் போல ஆப்பிள்களின் எண்ணிக்கை 3 மடங்கு. மாம்பழங்களின் எண்ணிக்கை ஆரஞ்சைவிட 5 அதிகம் என்றால் ஒவ்வொரு பழவகையிலும் எத்தனை இருந்தது?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com