முளைப்பயறு மிளகுத் தட்டை
தேவையான பொருட்கள்
பச்சைப்பயறு (முளைகட்டிய) - 1/2 கிண்ணம்
உளுத்தம்பருப்பு - 1/4 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
மிளகு - 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
வெண்ணை - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
கொத்துமல்லி, கறிவேப்பிலை (பொடியாக அரிந்தது) - 1/2 கிண்ணம்

செய்முறை
உளுத்தம் பருப்பையும் கடலைப் பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசி மாவையும் வெண்ணெயையும் ஒரு பேசினில் இட்டு, உதிர்த்து, உதிர்த்துக் கலக்கவும். பிறகு ஊறவைத்த பருப்புகள், பயறுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, சிறிது சிறிதாக நீர் சேர்த்து கெட்டியாக மாவைக் கலக்கவும் வாழை இலை அல்லது ஈரத்துணியின் மேல் சிறு சிறு தட்டைகளாகத் தட்டி, முள்கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும். எண்ணெய் காய்ந்தபின் மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ருசியான கரகர தட்டை தயார்.

வசுமதி கிருஷ்ணசாமி,
புளூம்ஃபீல்டு, மிச்சிகன்

© TamilOnline.com