சக்தி உருண்டை.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1/2 கிண்ணம்
அவல் - 1/2 கிண்ணம்
பாதாம் - 1/2 கிண்ணம்
கோதுமைமாவு - 1/2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 1/2 கிண்ணம்
வேர்க்கடலை - 1/4 கிண்ணம்
வெள்ளை எள் - 1/4 கிண்ணம்
கோந்து துகள் - 2 மேசைக்கரண்டி (சிறு கற்கள்போல இருக்கும், இண்டியன் ஸ்டோரில் கிடைக்கும்)
ஏலப்பொடி - 1தேக்கரண்டி
வெல்லத்தூள் - 1 1/2 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்

செய்முறை
முதல் 7 பொருட்களை நெய்விடாமல் தனித்தனியாக வறுக்கவும். பின் மிக்ஸியில் பொடி செய்யவும். கோந்தை அரை தேக்கரண்டி நெய்யில் வறுத்தால் பொரியும். இதனை அப்பளக் குழவியால் உருட்டிப் பொடிக்கவும். வெல்லத்தை 1/2 கிண்ணம் தண்ணீர் விட்டு ஒரு கம்பிப் பாகாக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, நெய் சேர்த்து, மீதி எல்லாப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கி, கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும். சுவையான சத்துமிக்க உருண்டை இது.

வசுமதி கிருஷ்ணசாமி,
புளூம்ஃபீல்டு, மிச்சிகன்

© TamilOnline.com