அரோரா: வறியோர்க்கு உணவு
நவம்பர் 24, 2019 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் என மூன்று அமைப்புகளும் இணைந்து இவ்வாண்டின் ஆறாவது வறியோர்க்கு உணவு" நிகழ்வை ஹெஸட் இல்லத்தில் (659 S. River Road, Aurora, IL: 60506; www.hesedhouse.org) நடத்தின. தமிழ்மொழிக்கென வாழ்நாளை அர்ப்பணித்த பேரறிஞர் மாவீரர் நினைவாக இது நடத்தப்பட்டது.

பெரும்பாலான தமிழ்ப்பள்ளி மாணக்கர்கள் சாமா, சிநேகா, சிவானிசிரீ, இனியன், ஏரகன், சுகிர்தன், சுபாசு அவர்தம் பெற்றோர்கள் கிருத்திகா, சண்முகப்பிரியா, அழகப்பன், இளஞ்செழியன், கந்தகுமார், கணேசன் ஆகியோர் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் செயலாற்றினர். இவ்வாண்டின் கடைசியென அமைந்த சிறப்பான நாளென்பதையும் பொருட்படுத்தாது தமது நேரத்தை இந்த புனிதமான பணிக்குச் செலவிட்ட ஆர்வலர்களை அமைப்புக்கள் பாராட்டின.

குறட்பாக்கள் நாற்பதன் விளக்கமும், தமிழர் நன்றிகூறும் நாளான நவம்பர் 27 விவரமும், தமிழ் மண்ணின் பெருமை கூறிச்சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த 150க்கும் மேற்பட்ட வறியோர், தொண்டாற்றிய சிறாரையும் பெற்றோரையும் வாழ்த்தினர். ஹெசடு நிறுவனத்தின் அன்றைய நாள் உணவுப் பொறுப்பாளர் திருவாட்டி. இலியோ அவர்கட்கும், ஏற்பாடு செய்த அமைப்புகளுக்கும் நன்றி கூறி நிகழ்ச்சி நிறைவெய்தியது..

வ.ச. பாபு,
தலைவர், அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்

© TamilOnline.com